கோவை: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குளங்கள் மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டங்கள் குறித்து பார்வையாளர்களிடம் ஒப்பந்த நிறுவனம் விளக்கிக் கூறியது.

மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள எட்டு குளங்களின் இயற்கை சூழலை மேம்படுத்துதல் மற்றும் மழைநீர் எளிதாக குளங்களை அடைவதற்கு உரிய வழித்தடங்களை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்தும் பணிகளுக்கான திட்டங்கள் தயாரிக்கும் பணியைக் கோவை மாநகராட்சி, டெல்லியைச் சேர்ந்த ஓயாஸிஸ் என்ற கலந்தாலோசக நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

இந்த நிலையில், ராக் அமைப்பு (RAAC) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையின் (ICCI) சார்பில் சேம்பர்ஸ் டவர்ஸ் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில், குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை பற்றிய விவரங்களை, ஓயாஸிஸ் நிறுவனத்தினர் பார்வையாளர்களிடம் விளக்கினர். மேலும், குளங்களில் கலக்கும் கழிவுநீரினை தடுத்து சுத்திகரித்தல், வருடம் முழுவதும் தண்ணீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்தல், மீன்வளர்ப்பு மையம், நடைபாதைகள், பூங்காக்கள், நவீன கழிப்பிட வசதி ஆகியவை அமைத்தல் குறித்த திட்டங்கள் மாதிரி வடிவமைப்பு புகைப்படங்களோடு விளக்கப்பட்டது.

வரும் மார்ச் மாத இறுதிக்குள் இத்திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு மாநகராட்சியிடம் இந்நிறுவனத்தினர் சமர்ப்பிக்க உள்ளனர். இக்கருத்தரங்கில், கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிட்டேடின் திட்ட மேலாளர் சுபாஷ் சந்திரா, ஓயாஸிஸ் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் ஆகாஷ் மற்றும் கோவையைச் சேர்ந்த ஏராளமான தன்னார்வலர்களும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.