நீலகிரி: கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை மக்கள் அதிகமாக சுற்றுலா செல்லும் நீலகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை வாரந்தோறும் கட்டுரையாக வெளியிட்டு வருகிறோம். அதன்படி, இன்று கோத்தகிரி நேரு பூங்காவின் சிறப்புகளை இன்று காணலாம்.

நேரு பூங்கா
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்ககளை கண்டு ரசிக்கவும் வரும் சுற்றுலா பயணிகள் கோத்திகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்கிறார்கள். அவ்வாறு கோத்தகிரி வழியாக சுற்றுலா பயணிகள் செல்லும் போது கோத்தகிரி பகுதியில் காமராஜர் சதுக்க பகுதியில் அமைந்துள்ளது கோத்தகிரி நேரு பூங்கா.

இந்த பூங்கா கடந்த 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள நேரு பூங்காவில் 100-க்கும் மேற்பட்ட வகையான மலர் செடிகள் உள்ளது. பூங்காவின் மையப் பகுதியில் நீலகிரி மாவட்ட பழங்குடி மக்களான கோத்தர்களின் கலை நயமிக்க கோவில் உள்ளது.

கோவில்
கோவிலின் தல விருட்சமாக 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிளிஞ்சி மரம் உள்ளது. சுமார் 100 மீட்டர் உயரமுள்ள கிளிஞ்சி மரத்தின் அடிப்பாக சுற்றளவு அடி உள்ளது. பூங்காவின் மையப்பகுதியில் வட்ட வடிவில் ரோஜா மேடை அமைக்கப்பட்டு உயர் ரக ரோஜாச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. பூங்காவின் அழகை மேலும் அழகு படுத்தும் வகையில் கோடை காலத்தில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா மரங்களும் உள்ளது, பசுமையான புல் வெளிகளும் உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தொடங்கும் காலங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் கோத்தகிரி வழியாக உதகைக்குச் செல்லும் போது நேரு பூங்காவின் அழகை ரசித்துச் செல்கின்றனர். கடந்த10 ஆண்டுகளாக தோட்டக்கலை துறை சார்பில் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் கோத்தகிரி நேரு பூங்காவில் 10-வது காய்கறி கண்காட்சி வரும் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

கோத்தகிரி பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் நேரு பூங்கா உள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு சென்றாலும், உதகையிலிருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் சென்றாலும் நேரு பூங்காவை கடந்து தான் செல்ல வேண்டும்.

கட்டணம்
பூங்காவின் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம், கேமிராவுக்கு ரூ.25-ம், வீடியோ கேமிராவுக்கு ரூ.75-ம் வசூலிக்கப்படுகிறது, வரும் 5 மற்றும் 6-ம் தேதிகளில் 10-வது காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளதால் பராமரிப்பு பணியின் காரணமாக பூங்காவிற்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.