காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் 2 வாரத்தில் அமையும்: திரையுலகினர் நம்பிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் 2 வாரத்தில் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்தார் என நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் 2 வாரத்தில் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்தார் என நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் இது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் திரையுலகினர் சார்பில் அறவழிப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், விஷால், நாசர், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர், நடிகைகள், பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.

இந்நிலையில், இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நடிகர்கள் நாசர், விஷால், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினர். மேலும் இந்தச் சந்திப்பில், காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, திரைத்துறை சார்பில் பெறப்பட்ட கையெழுத்து மனுவை வழங்கினர்.

ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு வெளியில் வந்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொன்வண்ணன் ஆகியோர் கூறியதாவது:- காவிரிக்காகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் திரைத்துறையினர் 5,000 பேர் கையெழுத்திட்ட மனுவை ஆளுநரிடம் அளித்தோம். காவிரி மேலாண்மை வாரியம் 2 வாரத்தில் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்தார், என்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...