குட்கா ஆலை விவகாரத்தில் அமைச்சர் மீது சந்தேகம் வந்தால் அவரிடமும் விசாரணை நடைபெறும்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை: கோவை கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத குட்கா ஆலை விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வந்தால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.

கோவை: கோவை கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத குட்கா ஆலை விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வந்தால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் சோதனை நடத்தி குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசார் சோதனை நடத்திய போது போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் 7 பேரையும் கைது செய்த போலீசார் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர். சோதனை குறித்தும் ,திமுகவினர் கைது செய்யப்பட்டது குறித்தும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது :- 

இந்த சோதனை ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்டது. அன்றைய இரவே தடயவியல் சோதனை நடத்தப்பட்டது. வி.ஐ.பி என்ற பெயரில் குட்கா புகையிலை இருந்தது. மேலும், ஆலை நிர்வாகம் பான்மாசலா, சுவீட் பாக்கு தயாரிக்க மட்டுமே உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், குட்கா பொருட்களை தயாரித்து வந்தது சோதனையில் தெரியவந்தது. மேலும் தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் தளபதி முருகேசன் பொறுப்பில் இருந்த போது ஆலை உரிமையாளர் அமித் ஜெயினின் கட்டிடத்திற்காக சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்றவை பெறப்பட்டுள்ளது. கட்டிடத்திற்கு அனுமதி எதுவும் பெற வில்லை.

அமித்ஜெயினுக்கு தி.மு.க-வை சேர்ந்த தளபதி முருகேசன் பல வகைகளில் உதவியுள்ளார். குட்கா ஆலையில் சோதனை நடத்தப்பட்ட வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. 

4 இன்ஸ்பெக்டர், 7 எஸ்.ஐ மற்றும் 20 போலீஸ் கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஓரு தனிப்படை அமித் ஜெயினை பிடிக்க டெல்லி விரைந்துள்ளது. வழக்கு ஆரம்ப நிலையில் இருக்கும் போதே தி.மு.க-வை சேர்ந்த் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உள்நோக்கத்துடன் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர் என்பது தவறு. அதிகாலையில் தான் போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைதில் அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை. அரசு நிறுவனங்களில் இருப்பவர்கள், அதிகாரிகள் இந்த சட்டவிரோத குட்கா ஆலை செயல்படுவதில் தொடர்பு இருந்தால் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆலையின் மேலாளர் ரகுராமை கஸ்ட்டியில் எடுத்து விசாரிக்க உள்ளோம். இந்த குட்கா ஆலையின் டீலர், ஏஜென்ஸி உள்ளிட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இதில் தொடர்பு இருக்கின்றதாக சந்தேகம் வந்தால் அவரிடமும் விசாரிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...