நிர்மலா தேவி வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய சந்தானம் குழுவிற்கு மேலும் 2 வாரகாலம் அவகாசம்

நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆளுநர் மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆளுநர் மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இதில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய விசாரணையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலிலேயே மாணவிகளிடம் பேசியதாக நிர்மலாதேவி தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 5 நாட்கள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அவர்களது காவல் முடிவடைந்ததையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர்கள் இருவரையும் சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் அழைத்து சென்றனர். ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் நீதிமன்றம் விடுமுறை என்ற காரணத்தால் நீதிபதி பரமசிவம் வீட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் மதுரை மத்திய சிறையில் மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, விருதுநகர் சிறையிலேயே தங்களை அடைக்க வேண்டும் எனவும், மதுரையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என முருகனும், கருப்பசாமியும் கேட்டுக் கொண்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற நீதிபதி பரமசிவம், விருதுநகர் சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார். 

இவ்விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருந்தார். மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர், அதிகாரிகள் மற்றும் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் இன்றுடன் முடிந்த நிலையில், சந்தானம் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...