வேலூர் : வேலூர் அருகே காதலை ஏற்க மறுத்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவியை விடுதியின் வாசலில் வைத்து கழுத்து அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கதம்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி லாவண்யா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை விவசாயம் படித்து வந்தார். சிதம்பரத்தில் உள்ள தாமரை விடுதியில் தங்கியிருந்தார். இன்று காலை 10 மணி அளவில் அவர் விடுதியில் இருந்து வெளியே வந்த போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் லாவண்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென்று அந்த வாலிபர் லாவண்யாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். உடனே மாணவி கூச்சல்போட்டு அலறியதால் அங்கு உள்ளவர்கள் கற்களால் சரமாரியாக அந்த வாலிபரை தக்கியுள்ளனர் .உடனே அங்கு நின்றவர்கள் சுற்றிவளைத்து அவரைப் பிடித்து அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதனிடையே, கழுத்து அறுக்கப்பட்ட மாணவி லாவண்யாவை மற்ற மாணவிகள் அவரை மீட்டு சிதம்பரம் மருத்துவக் கல்லாரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த வாலிபர் வேலூர் மாவட்டம் கதம்பம்பட்டியை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான அவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். லாவண்யாவும், நவீனும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். லாவண்யாவை அவர் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தாகவும், கடந்த சில மாதங்களாக நவீன்குமாரை லாவண்யா புறக்கணித்து வந்தாகவும் கூறப்படுகிறது. மேலும், தொலைப்பேசி அழைப்பையும் ஏற்காமல் வந்ததால் நேரில் வந்த நவீன் குமார் லாவண்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், ஆத்திரமடைந்து லாவண்யாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.