ரூ.700 கோடி மோசடி செய்த நிதிநிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனத்திடம் இருந்து வர வேண்டிய 700 கோடி ரூபாயை பெற்றுத் தரக்கோரி மாவட்டட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனத்திடம் இருந்து வர வேண்டிய 700 கோடி ரூபாயை பெற்றுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.



மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த டிஸ் ஆக்ரோ டெக் பொது நிறுவனத்தின் கிளைகள் தமிழகம் முழுவதும் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் மாதந்திர மற்றும் நிரந்திர வைப்பு திட்டத்தில் ஏராளமானோர் பணம் செலுத்தி உள்ளனர். கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியிலும் இதன் கிளை இயங்கி வந்த நிலையில், இந்த நிறுவனத்தின் முகவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெற்று செலுத்தி வந்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு ரூ. 1,137 கோடி மோசடி நடைபெற்றதாகவும், அதில், மூன்று லட்சம் பேருக்கு ரூ. 500 கோடி வரை நிர்வாகம் திருப்பி கொடுத்தாகக் கூறப்படுகிறது. மீதம் உள்ள ஒன்பது லட்சம் பேருக்கு ரூ. 700 கோடி பண பலன்களை அளிக்காத நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் குழு அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், 3 ஆண்டுகள் கடந்தும் பொதுமக்களுக்கு சேர வேண்டிய பண பலன்கள் கிடைக்கததால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது. முகவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, பொதுமக்களுக்கும், முகவர்களுக்கும் சேர வேண்டிய தொகை திரும்ப கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...