லங்கா கார்னர் பகுதியில் பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றியது மாநகராட்சி

கோவை: கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பகுதியில் அமைந்துள்ள பழமையான தனியார் வணிக வளாகம் சேதமடைந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அக்கட்டிடத்தை இடித்து அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பகுதியில் அமைந்துள்ள பழமையான தனியார் வணிக வளாகம் சேதமடைந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அக்கட்டிடத்தை இடித்து அகற்றி நடவடிக்கை எடுத்தனர். 

அரசு மருத்துவமனை அருகே சுமார் 30 வருடங்களாக இயங்கி வந்த இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், டீ கடைகள், மின் சாதனக் கடைகள், கண் கண்ணாடி கடைகள் என மொத்தம் 14 கடைகள் இயங்கி வந்தன.

இந்நிலையில், கட்டிட வளாகத்தின் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்ததால், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள கட்டிடத்தை இடிக்க முடிவு செய்த மாநகராட்சி ஒரு வருடத்திற்கு முன்பே வளாகத்தில் உள்ள 14 கடைகளையும் காலி செய்யுமாறு கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சில கடை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்ற அரசாணையை மேற்கோள்காட்டி வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், கடந்த மாதம் வளாகத்தில் அமைந்துள்ள கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனையடுத்து, இன்று காலை கடையில் உள்ள பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டிட வளாகம் இடித்து அகற்றப்பட்டது. 

கட்டிடம் அமைக்க கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...