மேட்டுப்பாளையத்தில் குடியிறுப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் - வீடியோ

கோவை: மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை, கிராம சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை, கிராம சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காட்டு யானைகளின் நடமாட்டமும் இதனால் ஏற்படும் சேதங்களும் அதிகரித்தபடி உள்ளது. இதுவரை உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டில் இருந்து வெளியேறும் யானைகள் வனத்தையொட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை அழித்து நாசப்படுத்தி வந்தது.

ஆனால், அண்மைக் காலமாக நகரையொட்டியுள்ள பகுதிகளுக்குள் யானைகள் உலா வரத்துவங்கியுள்ளது. குறிப்பாக நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளையும் சேதப்படுத்த தொடங்கியுள்ளது.

இரவு நேரங்களில் மட்டும் வனத்தை விட்டு வெளியேறிய யானைகள் தற்போது அதிகாலை நேரத்திலும் வரத் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை நெல்லிமலை வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டுயானை அங்குள்ள சமயபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலை வழியாக எவ்வித அச்சமும் இன்றி சென்றது. அதிகாலை நேரத்தில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் காட்டு யானை சாலையில் நடந்து வருவதைப் பார்த்து வீட்டிற்குள் சென்று ஒடி ஒளியும் நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் சமயபுரம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானி ஆற்றுக்கு தண்ணீர் தேடி வரும் யானைகள் ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் இரண்டு குடியிருப்பினையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளது.

இதனால் அச்சத்தில் உரைந்துள்ள சமயபுரம் கிராம மக்கள் இனியும் காலம் கடத்தாமல் வனத்துறை உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...