நீலகிரி: கோடைக்காலம் தொடங்கி விட்டது. ஆண்டு முழுவதும் உழைத்துக் களைத்த மக்கள் 'ஜில்' என்று இருக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் சென்று வருகின்றனர். சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி ஊட்டிக்கு புறப்பட்டு விடுவார்கள்.
நீலகிரி: கோடைக்காலம் தொடங்கி விட்டது. ஆண்டு முழுவதும் உழைத்துக் களைத்த மக்கள் 'ஜில்' என்று இருக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் சென்று வருகின்றனர். சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி ஊட்டிக்கு புறப்பட்டு விடுவார்கள்.
சரி..! அப்படி, ஊட்டியில் செல்பவர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லலாம்? என்பது குறித்து வாரந்தோறும் சிறப்பு செய்தித் தொகுப்பை வெளியிட்டு வருகிறது சிம்ப்ளிசிட்டி செய்திக்குழு. இந்த சிறப்பு தொகுப்பில் குறிப்பிட்ட சுற்றுலா பகுதியின் சிறப்புகள் என்ன? கட்டணம்? போன்ற பல்வேறு தகவல்கள் வெளியாகிறது. அதன்படி இன்று கோடநாடு காட்சி முனை குறித்து தெரிந்து கொள்ளலாம்.....!
கோடநாடு காட்சி முனை

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து 47 கி.மீ. தூரத்திலும், கோத்தகிரியிலிருந்து 19 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது கோடநாடு காட்சி முனை. கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 30 மீட்டர் உயரத்தில் உள்ளது இந்த சுற்றுலாத்தலம். சுற்று சூழல் மாசுபடாத அழகான சுற்றுலா தலங்களில் கோடநாடு காட்சி முனை முதன்மையானது.

சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து, பவானிசாகர் அணை, மேட நாடு எஸ்டேட், ரங்கசாமி பில்லர் (பீக்) போன்ற அழகிய காட்சிகளை கண்டு ரசிக்கலாம். டெலஸ் தளம் பகுதிக்கு அருகாமையில் வனத்துறையின சார்பில் ட்ரி பார்க் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறவும், உணவு உண்ணும் வசதிகளும் இங்கு உள்ளது. ட்ரி பார்கிலிருந்து கோடநாடு காட்சி முனைக்குச் செல்ல வனத்துறையின் சார்பில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சி முனையிலிருந்து பார்த்தால் தெங்கு மரஹாடா பள்ளத்தாக்கு, திப்பு சுல்தான் கட்டிய வரலாற்று செய்திகள் கூறும் கூஜ்ஜல் கோட்டை, கர்நாடக மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ள திம்பம், ஆசனூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமங்களின் காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.
ஆபத்து
அழகான இடத்தில் ஆபத்துகளும் அதிகளவு இருக்கும். கோடநாடு காட்சி முனைக்கு கீழ் பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் செங்குத்தான பள்ளத்தாக்குகள் உள்ளது. ஆபத்துகளைத் தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் இரும்பு கம்பிகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோடநாடு காட்சி முனைக்கு பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

பேருந்து கட்டணம்
கோத்தகிரியிலிருந்து கோடநாடு காட்சி முனைக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகிறது பேருந்து கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.17-ம், சிறியவருக்கு ரூ.9-ம் வசூலிக்கப்படுகிறது. கோடை சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நேரங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுமென அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் தொ¢வித்தனர். வனம் சார்ந்த சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தயவு கூர்ந்து அத்து மீற வேண்டாம் என்பதே வனத்துறையினரின் ஒரே கோரிக்கையாக உள்ளது.