கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் வட்டார போக்குவரத்துக் கழகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வாரப் பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு பேரணி வால்பாறை நடைபெற்றது. வட்டார போக்குவரத்துக் கழக அலுவலர் நிர்மலாதேவி முன்னிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து துவங்கிய இப்பேரணி, புதிய பேருந்து நிலையம், காந்திசிலை போன்ற முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. ஏராளமானோர் தலைக்கவசம் உயிர்க்கவசம், தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பைத் தவிர்ப்பீர் போன்ற 34 வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.

மேலும், பேருந்து, கார், ஆட்டோ, பேருந்து போன்ற வாகனங்களுக்கு விதிமுறைகளை எடுத்துரைக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்துக் கழக அலுவலர் நிர்மலாதேவி, அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்வது மிக முக்கியம் என அனைவருக்கும் அறிவுரை வழங்கினார். தமிழகம் வாகன விபத்தால் உயிர்ச்சேதமில்லாத மாநிலமாக விளங்க அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதில், வால்பாறை காவல்துறை ஆய்வாளர் திருமேனி, உதவி ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.