யானைகள் வளர்ப்பு முகாமில் பங்கேற்ற யானைகளின் உடல் எடை பரிசோதனை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பகாடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகளின் உடல் எடை பரிசோதனை இன்று நடைபெற்றது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பகாடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகளின் உடல் எடை பரிசோதனை இன்று நடைபெற்றது. 

முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் 23 வளர்ப்பு யானைகள் உள்ளது. இந்த வளர்ப்பு யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாட்கள் நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல, இந்த ஆண்டும் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்றது. முகாமையொட்டி, வளர்ப்பு யானைகள், யானை சவாரி மற்றும் இதர பணிகளுக்கு ஈடுபடுத்தப்படாமல் 48 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. வளர்ப்பு யானைகளுக்கு புரதச்சத்து மிகுந்த உணவுகள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு யானைகளின் உடல் திறனுக்கேற்ப புரதச்சக்தி உள்ள மருந்து பொருட்களும் கொடுக்கப்பட்டு வந்தன.



இந்த நிலையில், கடந்த மாதம் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நிறைவு பெற்ற நிலையில், இன்று வளர்ப்பு யானைகளின் உடல் எடை பரிசோதனை, தொரப்பள்ளி எடை பரிசோதனை மையத்தில் நடைபெற்றது. இதில், 14 வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையில் வளர்ப்பு யானைகளின் உடல் திறன் ஆரோக்கியமாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதில் கிருஷ்ணகிரி மற்றும் வண்டலூர் பூங்காவிலிருந்து வந்த யானைகளும் பங்கேற்றது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...