கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு என்று மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக உள்ள பவானியாறு ரசாயன கழிவுகளால் மாசடைந்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் உற்பத்தியாகும் பவானி நதி கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் வழியே தமிழகத்தினுள் நுழைகிறது. நுழைவு பகுதியான மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத ரசாயனக் கழிவுகள் சட்டவிரோதமாக ஆற்றில் கலக்கவிடப்படுவதாலும், கரையோரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சிகளின் கழிவுகள் அனைத்தும் நேரிடையாக ஆற்றுக்குள் விடப்படுவதாலும் பவானி ஆற்று நீர் கடுமையாக மாசடைந்து வருகிறது.
இதனால் பவானி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் குடிநீர் திட்டங்கள் மூலம் இந்நீரை பயன்படுத்தும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நீர்மின் உற்பத்தி பணிக்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள சமையபுரம் மற்றும் வெள்ளிப்பாளையம் என இரு இடங்களில் ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதால் கழிவுகள் கலந்த ஆற்று நீர் ஓடாமல் தடுக்கப்பட்டு தண்ணீரின் நிறமே மாறி விடுவதாகவும் இந்த தடுப்பணைகளின் அருகில் இருந்து எடுக்கப்பட்டு விநியோக்கப்படும் குடிநீரால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மேட்டுப்பாளையத்திற்கு வந்த அய்யாக்கண்ணு, பவானியாற்றில் கழிவுகள் கலக்க விடப்படும் பகுதிகளையும், பாதிப்புகளை அதிகரிப்பதாக புகார் கூறப்படும் தடுப்பணைகளையும் பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கிடைக்கும் நீர் வீணாகாமல் தடுத்து நிலத்தடி நீர்மட்டம் உயரவே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்ற நிலையில், தடுப்பணைகள் அவசியமான இடங்களை புறக்கணித்துவிட்டு, மேட்டுப்பாளையம் பகுதியில் ஓடும் பவானியாற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்காமல், எங்கு தண்ணீர் மாசடைகிறதோ அங்கேயே மின் உற்பத்தி பணிக்கென கூறி தடுப்பணைகளை கட்டி அதனைத் தேக்குவதால் நீரின் தன்மை மேலும் மோசமாக்கப்பட்டு வரும் கொடுமை இங்கே நடப்பது வேதனை.
இந்த நீரை வேறு வழியின்றி குடிநீராக பயன்படுத்தும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தடுப்பணைகள் மூலம் முறையாக மின் உற்பத்தியும் நடைபெறுவதில்லை. பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்க தமிழக முதல்வரிடம் நேரில் சென்று வலியுறுத்துவேன். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டி சென்னையில் போராட்டம் நடத்தப்படும்." என்றார்.