திருப்பூரில் பெருகி வரும் பாலியல் தொழில்: ஒருவாரத்தில் இரு பாலியல் கும்பலை மடக்கிப் பிடித்த போலீசார்

திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்துள்ள திருப்பூரில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், திருப்பூர் மாநகர் பகுதியில் அதிகரித்துள்ள பாலியல் தொழிலை முறியடிப்பதே போலீசாருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.

திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்துள்ள திருப்பூரில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், திருப்பூர் மாநகர் பகுதியில் அதிகரித்துள்ள பாலியல் தொழிலை முறியடிப்பதே போலீசாருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.

திருப்பூர் மாவட்டம் நல்லூர் அமர்ஜோதி கார்டன் ஏ.எஸ்.நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஆண்கள் வந்து சென்றனர். இதனால், சந்தேகமடைந்த அப்பகுதியினர், அங்கு பாலியல் தொழில் நடக்கலாம் என மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த குறிப்பிட்ட பகுதிக்கு சென்று சோதனை செய்யுமாறு திருப்பூர் தெற்கு மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட பகுதிக்கு திருப்பூர் தெற்கு மகளிர் போலீசார் சென்றனர். அப்போது, அந்த பங்களா பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து, போலீசார் அந்த பங்களாவைச் சுற்றி வளைத்தனர்.



அந்த பங்களாவில் தனித்தனியாக 3 அறைகள் இருந்தன. அவற்றின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து, பெண் போலீசார் திடீரென்று சென்று கதவுகளை தட்டினர். பின்னர், நீண்ட நேரத்திற்குப் பிறகு கதவுகள் திறக்கப்பட்டன. அப்போது, நடத்தப்பட்ட விசாரணையில், அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதையடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 இளம்பெண்களை மகளிர் போலீசார் மீட்டு கோவை துடியலூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, பாலியல் தொழில் புரோக்கர்களான திருப்பூர் கோவில்வழியைச் சேர்ந்த ஆனந்தா (வயது 41), செவந்தாம்பாளையத்தைச் சேர்ந்த ரவி (41), ஏ.எஸ்.நகரைச் சேர்ந்த ஜெயகோபால் (29), சேரன் தொழிலாளர் காலனியைச் சேர்ந்த முருகானந்தம் (24) ஆகியோரே போலீசார் கைது செய்தனர்.



விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன் லைனில் வியாபாரம் செய்யப்போவதாக, இவர்கள் அந்த சொகுசு பங்களாவை ரூ. 25,000-க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன்படி, ஆன் லைனில் வியாபாரம் செய்வதுபோல், வாடிக்கையாளர்களை வரவழைத்து பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளனர்.

மேலும் இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், "எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வின் முடிவில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. அங்கு இருந்த அனைவரையும் கைது செய்தோம். இதுபோன்று சந்தேகத்திற்கு இடமாக ஏதேனும் இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள், உடனடியாக கைது செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூரைப் பொறுத்தவரை தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால், குறிப்பாக பெண்கள் அதிகம் வேலை செய்கின்றனர் அவர்களிடம் ஆசைவார்த்தை பேசி இந்த செயலில் ஒரு சிலர் அவர்களை விழவைத்து விடுகின்றனர். பெண்கள் இதுபோன்ற ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும்," எனத் தெரிவித்தனர்.



கடந்த இரு நாட்களுக்கு முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரு பெண்கள் உள்ளிட்ட மூன்று புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...