மாயார் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி நீலகிரி ஆட்சியரிடம் அய்யாக்கண்ணு மனு

நீலகிரி : மாயார் ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறித்தி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மனு அளித்தார்.

நீலகிரி : மாயார் ஆற்றில் தடுப்பணை கட்ட  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறித்தி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மனு அளித்தார்.



காவிரி  மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும்  சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள்  நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து மனு  அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம்  மாநில தலைவர் அய்யாக்கண்ணு  பேசுகையில், "சிரப்பூஞ்சியை விட ஆண்டுக்கு அதிக மழை பெய்ய கூடிய இடம் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவலா பகுதியாகும்.  இங்கு, உற்பத்தியாகும் மழை நீர் பாண்டியாறு, புன்னம்பழா ஆற்றின் வழியாக கேரளா மற்றும் கர்நாடாகவிற்கு சென்று வீணாகக்  கடலில் கலக்கிறது. எனவே, மாயார் ஆற்றில் தடுப்பணை கட்டி தமிழகத்திற்கு திருப்பினால் பவானி பாசன விவசாயிகள் பயன்டைவார்கள்.  ஆண்டுக்கு 5 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர்  தமிழ்நாட்டிற்க்கு கிடைக்கும். 

மேலும், கார்ப்பரேட் கம்பெனிகள் இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களை மக்கள் உண்பதால் 50 சதவீதம் பேர் ஆண்மை இழக்கவும், பெண்கள் கருத்தரிக்கும் சக்தியை இழக்க செய்யவும் வாய்ப்புள்ளது. இந்த நிலை ஏற்படாமல் இருக்க மத்திய அரசு அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வதுடன், ஆறுகளில் தடுப்பணைகள் கட்டியும், ஏரி, குளம், கண்மாய்களை தூர்வாரியும் சீமை கருவேல மரங்களை அகற்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், மத்திய அரசு நதிகளை தேசிய மயமாக்கி அரபிக்கடலிலும், வங்காள விரிகுடாவிலும் வீணாகக்  கடலில் கலக்கும் தண்ணீரை தென்னகத்திற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும்," என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...