திருப்பூர் : திருப்பூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்காத மாநகராட்சியைக் கண்டித்தும் குண்டும், குழியுமான சாலையில் மலர் வளையம் வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டத்துப்பாளையம் பகுதியிலிருந்து நெருப்பெரிச்சல் பகுதியை நோக்கிச் செல்லும் சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. கனரக வாகனங்களினாலும், சாலை சரியாக செப்பனிடாததாலும் அந்தப் பகுதியிலான தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், பழுதடைந்த சாலையை செப்பனிடாத மாநகராட்சியைக் கண்டித்தும், இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை உணர்த்தும் வகையில், குண்டும், குழியுமான சாலையில் மலர் வளையம் வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.