வால்பாறை, உதகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நீலகிரி : நீலகிரியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


நீலகிரி : நீலகிரியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



உதகையில் கடந்த 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, உதகை மலை ரயில்நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு குறித்தும், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணில் ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள், காவல்துறையினர் என 1௦௦-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸ் பகுதில் முடிவடைந்தது. மேலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.



இதேபோல, கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் நிர்மலாதேவி மற்றும் வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் திருமேனி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில், 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கலந்து கொண்டனர். இப்பேரணியானது, புதிய பேருந்து நிலையத்திலிருந்து தபால் நிலையம் வரை சென்றடைந்தது. 



மேலும், வால்பாறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்காக வால்பாறை சுகாதார மருத்துவர்கள் விவின்பிரசாத், வித்யா ஆகியோர் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...