கோவையில் ஏற்படும் எவ்வளவு பெரிய தீ விபத்தையும் கட்டுப்படுத்த முடியும்: தீயணைப்புத் துறை

கோவை: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஏற்படும் தீ விபத்தினை அணைக்க போதுமான தண்ணீர் இருப்பதாகவும், எவ்வளவு பெரிய தீவிபத்து ஏற்பட்டாலும், அதனைக் கட்டுப்படுத்த முடியும் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.


கோவை: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஏற்படும் தீ விபத்தினை அணைக்க போதுமான தண்ணீர் இருப்பதாகவும், எவ்வளவு பெரிய தீவிபத்து ஏற்பட்டாலும், அதனைக் கட்டுப்படுத்த முடியும் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. 

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என கோவை மாவட்டம் அழைக்கப்படுக்கிறது. சென்னைக்கு அடுத்தப்படியாக மக்கள் தொகையிலும், கட்டிடங்களின் எண்ணிக்கையிலும் கோவை தான் உள்ளது. காந்திபுரம், கிரஸ்கட் ரோடு, டவுன்ஹால், உக்கடம், ஒப்பணக்கார வீதி, அவினாசி சாலை, ராம்நகர், ரயில்நிலையம், கோவை அரசு மருத்துவமனை, 100 அடி ரோடு, சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, என்.எஸ் ஆர் சாலை உள்ளிட்டவை எப்போதும் தொழில்கள் நிறைந்த இடமாகவும் பரபரப்பாகவும் மக்கள் அதிகம் கூடும் இடமாகவும் உள்ளன.

எனவே, கோடை காலங்களில் தீ விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உஷ்ணம் காரணமாக கதகதப்பான நிலையே, இரவிலும் கூட இருக்கும். இதனால், சிறு தீப்பொறி பட்டால் கூட அது பெரிய தீ விபத்தாக மாற வாய்ப்புள்ளது. கோவையைப் பொறுத்தவரையில், 5 மாநகரப் பகுதி தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அவை, கோவை தெற்கு, வடக்கு, கணபதி, பீளமேடு மற்றும் அன்னூர் ஆகும். 

கோடை காலம் என்றாலே தண்ணீர் பிரச்சினை தலைதூக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், கோவையில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைக்க கோவை மாவட்ட தீயணைப்பு துறையில் தண்ணீர் பொதுமான அளவு உள்ளதா என்றக் கேள்வி பொதுவாக எழுந்துள்ளது.

கோவை வடக்கு, தெற்கு மற்றும் கணபதி ஆகிய தீயணைப்பு நிலையங்கள் அரசுக்கு சொந்தமான கட்டங்களில் இயங்கி வருகிறது. அங்கு, ஆழ்துளை கிணறுகள் உள்ளதால், தண்ணீர் அதில் எடுத்துக்கொள்ளலாம். அன்னூர் மற்றும் பீளமேடு தீயணைப்பு நிலையங்கள் வாடகை கட்டங்களில் இயங்கி வருகின்றன. அங்கு ஆழ்துளை கிணறு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பெரும் விபத்து ஏற்படும் போது, தண்ணீரைப் பற்றாக்குறையாகக் காட்டி, உரிய நேரத்தில் தீயை அணைக்க வர முடியாத சூழல் உருவாகுமோ என்ற பீதி பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.



இந்த நிலையில், இது குறித்து கோவை மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி பி. பிரதீப்குமாரிடம் கேட்டபோது, "கோவையில் எவ்வளவு பெரிய தீ விபத்து ஏற்பட்டாலும், அதனைக் கட்டுப்படுத்த, முழுவதுமாக அணைக்க போதுமான தண்ணீர் உள்ளது. கோவை மாநகராட்சி சார்பாக எப்போதும் தண்ணீர் லாரிகள் தாயாராக உள்ளன. கடந்த முறை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, புகை மூட்டம் ஏற்பட்டது. அதனை அணைக்க பொதுமான தண்ணீரை மாவட்ட ஆட்சியர் நிர்வாகமோ அல்லது மாநகராட்சியோ உடனே ஏற்பாடு செய்து கொடுக்கிறது. ஆகையால், தீ விபத்தின் போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிலை. 10 தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. அனைத்திற்கும் தண்ணீர் தேவையான அளவு உள்ளது," என்றார்.



கோவை மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. இது குறித்து பிரதீப்குமார் கூறுகையில், "குறுகளான பகுதிகளுக்கு செல்ல தலைமை தீயணைப்பு நிலையத்தில் இரண்டு வாட்டர் மிஸ்ட் என சொல்லப்படும் ஜீப் உள்ளது. இது சிறிய இடத்தில் செல்லக்கூடிய வகையில் உள்ளதால், தீ விபத்து ஏற்பட்டவுடன் முதற்கட்டமாக அதனை அணைக்க முடியும். அதுமட்டுமில்லாமல், மொபையில் டெண்டர் என சொல்லக்கூடிய இருசக்கர வாகனம் 'புல்லட் டெண்டர்' இரண்டு உள்ளது. இது மிகச்சிறிய பகுதிகளில் செல்லக்கூடியவை. மேலும், 'எமர்ஜேன்சி ரெஸ்கியூ டெண்டர்' உள்ளது. இதில், தீயை அணைக்க தேவைப்படும், அனைத்து உபகரணங்களும் உள்ளன. கோடை காலத்தில் தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிக உள்ளதால், மக்கள் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்," என்றார்.



"தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைக்கத் தீயணைப்பு வாகனம் நுழைய முடியாதபடி குறுகளான சாலைகள் உள்ளன. அதே சமயம், ஆக்கிரமிப்புகளால் சில இடங்களில் சாலைகள் குறுகளாக மாற்றப்பட்டுள்ளது," என்கிறார் சமூக ஆர்வலர் அருள்ராஜ்.



மேலும், தீயணைப்பு நிலையங்களில் காலியாக இருந்த பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டுவிட்டது. ஆகையால், ஆள் பற்றாக்குறை இல்லை என கோவை மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி பி. பிரதீப்குமார் தெரிவித்தார். 

வரும் காலங்களில் இந்த சிறிய ரக தீயணைப்பு வாகனங்களை அதிகப்படுத்தவும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் வாங்கித் தீ விபத்தை உடனே அணைக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...