குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து காட்டு யானைகள், வீடுகளின் சுவர்களை இடித்து சேதப்படுத்தியதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து காட்டு யானைகள், வீடுகளின் சுவர்களை இடித்து சேதப்படுத்தியதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் மற்றும் அதையொட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறும் யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை அழித்து நாசப்படுத்தி வருகிறது. ஆனால், அண்மை காலமாக நகரையொட்டியுள்ள பகுதிகளுக்குள் யானைகள் உலா வரத் துவங்கியுள்ளதும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீட்டின் சுவர்களை சேதப்படுத்துவதும் பொதுமக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு மேட்டுப்பாளையம் நகரையொட்டியுள்ள சமயபுரம் பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த கருப்புசாமி மற்றும் செல்வராஜ் என்பவர்களின் வீடுகளின் சுவர்களை இடித்துவிட்டு உள்ளே நுழைய முயன்றன. ஆனால், அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பிய காரணத்தினால், சாலையைக் கடந்த யானைகள் பவானி ஆற்றுப்பகுதிக்குள் நுழைந்தது. யானைகளின் தொடர் அச்சுறுத்தலால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறது.

மாலை நேரமாகியதும், யானைகள் ஊருக்குள் நுழைந்து விடுவதால் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தற்போது, இந்த வீடுகளையும் யானைகள் இடித்து தள்ளுவதால் செய்வதறியாது தவிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, நெல்லிமலை பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும், யானைகளால் தங்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...