கோவை : கோவை வ.உ.சி. பூங்காவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, வ.உ.சி உயிரியல் பூங்காவில் நடைபெறவுள்ள மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். வ.உ.சி. உயிரியல் பூங்காவில் மான்கள், மயில்கள், குரங்குகள் காப்பிடங்களையும், பாம்புகள் பண்ணையினையும் அவர் பார்வையிட்டார். பின்னர், உயிரியல் பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகளுக்கான ரயில் நிலையத்தைப் பார்வையிட்டு, பொதுமக்களுடன் ரயிலில் பயணித்து ஆய்வு செய்தார்.

பின்னர், கோவை மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில், மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், சாலைகள், மின்விளக்குகள், குடிதண்ணீர், பாதாள சாக்கடைகள் மேலாண்மைப் பணிகள், துப்புரவு தூய்மைப் பணிகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடைபெற்று வரும் பணிகள் பற்றியும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் அதிகாரி ஹர்மந்தர் சிங் கலந்தாய்வு மேற்கொண்டார்.