ஜல்லிக்கட்டு வன்முறை சம்பவம்: கோவையில் இறுதிகட்ட விசாரணை தொடக்கம்

கோவை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோவையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஐந்தாம் கட்ட விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று தொடங்கினார்.


கோவை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோவையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஐந்தாம் கட்ட விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று தொடங்கினார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று ஒரு சாரர் குற்றம்சாட்டினர். இளைஞர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததே வன்முறைக்குக் காரணம் என்று சிலர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு யார் காரணம்? என்று விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கோவையில் பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் நான்கு முறை விசாரணை நடத்தியுள்ளது.

தொடர்ந்து, இறுதி விசாரணையான ஐந்தாம் கட்ட விசாரணையை நடத்த விசாரணைக் குழு இன்று கோவை வந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக் குழு ஆணையர் ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கும் இறுதி விசாரணையில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி உட்பட 6 காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறுகிறது. சம்மன் கொடுத்து விசாரணைக்கு வராதவர்களை நாங்கள் வற்புறுத்துவதில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணையில் கோவையில் பாதிக்குப் பாதி பேர் காவல்துறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அடுத்து மதுரையிலும், சென்னையிலும் விசாரணை தொடரும். பத்திரிக்கையாளர்களிடம் நடந்த விசாரணையில் அவர்கள் ஆதாரங்களையும், புகைப்படங்களையும் கொடுத்துள்ளனர். மேலும் மதுரையில் 800-க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் அலங்கநால்லூரில் போராடியவர்கள் போலீசாருக்கு ஆதரவாகத்தான் வாக்குமூலம் அளித்துள்ளனர்." என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...