வாட்ஸ்அப் ஆடியோவில் இருந்த குரல் நிர்மலா தேவியின் குரல்தான்: அறிக்கையில் உறுதி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவியின் குரலும், வாட்ஸ்அப் ஆடியோவில் இருந்த குரலும் ஒன்றுதான் என சோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவியின் குரலும், வாட்ஸ்அப் ஆடியோவில் இருந்த குரலும் ஒன்றுதான் என சோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி முதல் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். நிர்மலாதேவி போலீசில் மாட்ட முக்கிய ஆதாரமாக இருந்த வாட்ஸ்அப் உரையாடலில் இருந்தது அவரது குரல் தானா..? என்ற கேள்வியும் எழுந்தது. இந்தக் கேள்வி விசாரணையின் போக்கை மாற்றிவிடக்கூடாது என்பதற்காக, அவரது குரலை சோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி, வாட்ஸ்அப் ஆடியோ - நிர்மலா தேவியின் குரலை ஒப்பிட்டு சோதனை செய்ததில், இரு குரல்களும் ஒன்று என சோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...