கோவை: மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவம் என அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வசனங்களே இல்லாமல் வெளிவந்துள்ள மெர்குரி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக், நடிகர்கள் சனந்த், தீபக் ஆகியோர் கோவையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் கண்டுகளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இயக்குநர் கார்த்திக் பேசுகையில், "மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட் உலகின் ஆதிக்கத்தை மொழி வேறுபாடு இல்லாமல் எடுத்துரைக்கிறது. எனவே, வசனங்கள் இல்லாத சைகை மொழி படத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். மெர்குரி கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவமாக உள்ளது. இப்படத்தில், கார்த்திக், பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் போராட்டம் காரணமாக படம் தாமதமாக வெளியான போதும், படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இந்தப் படத்தில் நடித்தவர்களை பாராட்டினார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படத்தின் கதை முதல்கட்ட அளவிலேயே இருக்கிறது," என்றார்.