கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், பட்டாணி பறிமுதல்

கோவை: கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வப்போது மாநகரில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.



அதன்படி, கடந்த வாரம் தாமஸ் வீதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலன தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், மாநகரில் உள்ள வணிக வளாகங்கள், பழக்கடைகள், குளிர்பானக் கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சுமார் 25 கிலோ பச்சைப் பட்டாணி, 70 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.



உணவு பாதுகாப்புத் துறை சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி நடத்தப்பட்டதும், அதில் கலப்பட உணவுகளை கண்டறிதல் குறித்த செய்முறை விளக்கமளித்ததும் குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...