பிரதமரை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தவர் கைது: கோவை மாநகர போலீஸ் நடவடிக்கை

கோவை: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக செல்போனில் பேசிய ரபீக் என்பவரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக செல்போனில் பேசிய ரபீக் என்பவரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர் ரபீக் (53).

வழக்கில் இருந்து விடுதலையான இவர் சேலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் செல்போனில் உரையாடுவது போன்ற ஆடியோ சமீபத்தில் வெளியானது. அந்த ஆடியோவில், "பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், காவல் ஆய்வாளர் கணேஷ் தலைமையிலான போலீசார் ரபீக்-ஐ தேடி வந்தனர்.

இந்த நிலையில், இன்று மாலை அவரை கரும்புக்கடை பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், தற்போது வெளியாகியுள்ள ஆடியோவில், தான் 160 வாகனங்களை அடித்து உடைத்ததாக ரபீக் கூறியுள்ள நிலையில், பொதுமக்கள் யாராவது ரபீக்கால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக புகார் அளிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

ரபீக் மீது ஏற்கனவே (போக்கிரி) சரித்திரப் பதிவேடு தொடங்கியிருப்பதும், அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...