கோவை: கோவையில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 25-ம் தேதி நடக்கிறது.

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் இந்த முகாமானது, ஆசிரியர்களுக்காக மட்டுமே சிறப்பு நிகழ்வாக நடைபெற உள்ளது. எனவே, ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் என ஆண், பெண் இருபாலரும் தங்களது கல்விச்சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். வயது வரம்பு இல்லை. இம்முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இம்முகாமில், கலந்து கொள்ள விரும்பும் தனியார் பள்ளிகள் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் வேலையளிப்போராக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.