சங் பரிவார் அமைப்புகளின் ஏஜெண்டாக செயல்படும் அ.தி.மு.க.,: கம்யூன்ஸ்ட் கட்சி விமர்சனம்

கோவை: தமிழகத்தில் சங் பரிவார் அமைப்புகளின் மூன்றாம் தர ஏஜெண்ட்டாக அ.தி.மு.க., செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி விமர்சித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் சங் பரிவார் அமைப்புகளின் மூன்றாம் தர ஏஜெண்ட்டாக அ.தி.மு.க., செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி விமர்சித்துள்ளார். 

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- கேரளாவில் நடைபெற உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத போக்குகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்குஅதிகரித்துள்ளது. டீசல், பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. பா.ஜ.க.,வும் அ.தி.மு.க.,வும் இணைந்து செயல்படுகின்றன. தமிழகத்தில் பா.ஜ.க.,வின் ஏஜெண்ட்டாக அ.தி.மு.க., செயல்படுகிறது. சங்க் பரிவார் அமைப்புகளின் மூன்றாம் தர ஏஜெண்ட்டாக அ.தி.மு.க., செயல்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் பா.ஜ.க.,வை காப்பாற்றும் நோக்கில் 

நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க., செயல்பட்டது.

மேலும், பா.ஜ.க., தலைவர்கள் அறிவியல் பூர்வமற்ற கருத்துகளை மக்கள் மத்தியில் பேசி வருகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யக் கோரிய எதிர்கட்சிகளின் தீர்மானத்தை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அவசரப்பட்டு நிராகரித்து விட்டார். இது, எதிர்பார்த்ததுதான். சட்டம் தெரிந்த அவரே, பரிந்துரை தொடர்பாக ஆலோசிக்க குழு அமைக்காமல் அவசரமாக முடிவு செய்துவிட்டார். தூக்கு தண்டனை வழங்க சட்டம் கொண்டு வந்ததின் மூலம் பாலியல் வன்கொடுமையுடன் சாட்சியங்களை மறைக்க பெண்கள் கொலை செய்யக்கூடும் என பெண்கள் நல அமைப்புகள் கருதுகின்றன. அரசு சட்டம் கொண்டு வரும் முன் பெண்கள் அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து இருக்கலாம்.

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது சி.பி.எம் நிலைப்பாடு மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடும் இது தான். பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் சிக்கி உள்ள ஆளுநரை அரசு நிச்சயம் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் குறைந்து வருகிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...