கோவையில் ஏர் கலைப்பைகளுடன் வாயில் கருப்பு துணி கட்டி மனித சங்கிலி போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சியினர் சார்பில் கோவையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஏர் கலைப்பைகளுடனும் வாயில் கருப்பு துணி கட்டி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சியினர் சார்பில் கோவையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஏர் கலைப்பைகளுடனும் வாயில் கருப்பு துணி கட்டி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காலதாமதம் செய்யாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், விவசாய சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. 



இதன் ஒருபகுதியாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், போதிய அழுத்தம் கொடுக்காத தமிழக அரசையும் கண்டித்து கோவையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், சிலர், ஏர் கலைப்பைகளுடனும் வாயில் கருப்பு துணி கட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நஞ்சப்பா சாலையில் துவங்கிய மனித சங்கிலி போராட்டம் காந்திபுரம், பவர்ஹவுஸ், கிராஸ் கட் சாலை, 100 அடி சாலை என சுமார் 3 கி.மீ தூரத்துக்கு நடைபெற்றது.



மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளும் திரண்டெழுந்து தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தினால் பா.ஜ.க., அரசைக் கண்டித்து பல கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...