மேட்டுப்பாளையம்: இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி இன்று மேட்டுப்பாளையத்தில் அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 20-ம் தேதி அதிகாலை இந்து முன்னணியின் நகர துணைச்செயலாளர் தனபால் என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றனர். இதில், வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
இது குறித்து வழக்குப் பதிவு செய்திருந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் இச்சம்பவத்திற்குக் காரணமானவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.