கோவையில் உணவு பாதுகாப்பு துறை சார்ப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கண்காட்சி

கோவை: உணவு பண்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் இன்று விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

கோவை: உணவு பண்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் இன்று விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை சார்ப்பில் உணவு பண்டங்களில் கலப்படம் செய்யப்படும் பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.



மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று அங்கு வந்த பொதுமக்களிடம் இது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் அதை உண்பவர்களுக்கு நோய் அபாயம் ஏற்படுகிறது." என்றார்.

தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்களிடம் கலப்பட பொருட்கள், கலப்படம் அல்லாத பொருட்களை கண்டறிவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் கலர் பொடிகள் உபயோகிக்கப்படும் போது எவ்வாறு நிறம் மாறி காணப்படும்? அசல் பொருட்களை எவ்வாறு கண்டறிவது? உணவு பண்டங்களின் தயாரிப்பு தேதி காலாவதி உள்ளிட்டவை கண்டறிவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.



மாவட்ட அறிவியல் கழகம் சார்ப்பில் அமைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை மையமும் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதில், பல்வேறு வகையான புத்தங்கள் இடம் பெற்றிருந்தன. இந்தக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட புத்தகங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...