ஸ்மார்ட் சிட்டி விரிவாக்கம்: வழிபாட்டுத்தலங்களை இடமாற்றம் செய்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு

கோவை: ஸ்மார்ட் சிட்டி விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை அகற்றி மாற்று இடத்தில் அமைத்துத் தர வலியுறுத்தி இந்து உரிமை கழகத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: ஸ்மார்ட் சிட்டி விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை அகற்றி மாற்று இடத்தில் அமைத்துத் தர வலியுறுத்தி இந்து உரிமை கழகத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெறும் நாளான இன்று இந்து உரிமை கழகத்தினர் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், ஸ்மார்ட் சிட்டி விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளை அகற்றி மாற்று இடத்தில் அமைத்துத் தர வலியுறுத்தியுள்ளனர்.



இது குறித்து மனுதாரர்கள் கூறுகையில், "கோவையில் தற்போது மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகவிட்டதாலும், வாகன பெருக்கத்தால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருவதாலும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல் வடிவம் பெறும் போது, விரிவாக்கத்திற்கு இடையூறாக சாலைகளில் அமைந்துள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை அகற்றி மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வருங்கால சந்ததியினரின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு அனைத்து மதத்தினரும் தாமாக முன்வந்து உதவ வேண்டும்." என்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...