விவசாயி மீது தாக்குதல்: அதிகாரி மீது நடவடிக்கை கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயி-யை தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயி-யை தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் விவசாயிகள் அல்லாதவர்களை வைத்து அதிகாரிகள் லாபம் பார்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சந்தை அதிகாரிகள் பல்வேறு வியாபாரிகளைக் கொண்டு லாபம் பார்ப்பதைக் கண்டித்து வெளியே கூறிய விவசாயியை சந்தை அதிகாரிகள் தாக்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில், விவசாயியைத் தாக்கிய அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "தாக்கப்பட்ட விவசாயி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாரிகள் விவசாயி மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். உழவர் சந்தைகளில் கடைகளை அமைக்க விடமாட்டோம் என்று அதிகாரிகள் மிரட்டுகின்றனர். பல அதிகாரிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் சூழலில் ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் விவசாயிகள் மொத்தமாக பாதிக்கப்படுகின்றனர்." என்றார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...