பள்ளிக் கூடங்களில் இனி நாள்தோறும் சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி கல்வி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், பள்ளிக்கூடங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். அதன்படி, மாணவர்கள் மைதானத்திற்குச் சென்று, தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளில், ஒருமணி நேரம் ஈடுபட வேண்டும். இது போன்ற பயிற்சிகளால் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தகுதியை மாணவர்கள் பெற முடியும். ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்கு, தனியாக மதிப்பெண்கள் உண்டு. என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 150 பக்கங்களில் புதிய வழிகாட்டுதல் புத்தகத்தையும், சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.