கோவை ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு பணியில் தீயணைப்புத் துறையினர்: தற்கொலை முயற்சிகளை தடுக்க தீவிரம்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் யாரேனும் தற்கொலை முயற்சி செய்தால் அதனைத் தடுக்கவும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் யாரேனும் தற்கொலை முயற்சி செய்தால் அதனைத் தடுக்கவும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி குடும்பத்துடன் 4 பேர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அதன் பின்பு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளன்று பொதுமக்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.



இது குறித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்புறம் 15 காவலர்களும், வளாகத்தினுள் 10-க்கும் மேற்பட்ட காவலர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் உதவி ஆணையர் தலைமையில் இந்த குழு இயங்கும்." என்றார்.



இதனிடையே, பாதுகாப்புகளையும் மீறி யாரேனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அவர்களை மீட்க இரு தீயணைப்பு வீரர்களும் காப்பாற்ற தேவையான உபகரணங்களும் தயார் நிலையில் தீயணைப்பு துறையினர் வைத்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பி.பிரதிப்குமார் கூறுகையில், "பணியில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒருவேளை யாரேனும் தீ பற்றவைத்துவிட்டால் அதனை அணைக்க தீ அணைப்பான் தயார் நிலையில் உள்ளது. மேலும், தண்ணீருடன் 2 வாளிகளும், கயிறுகளும், போர்வைகளும் உள்ளன." என்றார்.

இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே பாராட்டுகள் கிடைத்தாலும் இது அனைத்து நாட்களிலும் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...