திருப்பூர்: கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் லிப்ட் வசதியுடன் கூடிய அம்மா மெடிக்கல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சமூக நலத்துறை மற்றும் வருவாய்த் துறையின் சார்பாக தாலிக்கு தங்கம் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை வழங்குதல், மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் பட்டா மாறுதல் என 385 பயனாளிகளுக்கு ரூ.73,74,790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை வயது முதிர்ந்து தான் இறந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் அனைத்து கால்நடைகள் பயன்பெறும் வகையில் லிப்டு வசதியுடன் புதிதாக இலவச அம்மா மெடிக்கல் ஆம்புலன்ஸ் வசதியை தமிழக முதல்வர் தொடங்கி வைப்பார். மருத்துவ குழுவுடன் கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும். தமிழகத்தில் காவல் துறையினர் தாக்கப்பட்டால் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.