கோவை: கோவை குமாரசாமி குளக்கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பதாக தன்னார்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குமாரசாமி குளத்தில் இன்று இ.எஃப்.ஐ அமைப்பினர் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குளத்தின் கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து இ.எஃப்.ஐ. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சை பிரசாத் கூறுகையில், "புவி தினத்தை முன்னிட்டு இன்று குமாரசாமி குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். அப்போது, பிளாஸ்டிக் கழிவுகள், தர்மாக்கோல் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துகளை அங்கிருந்து அகற்றினோம். அங்கு கொட்டப்பட்ட குப்பைகளில் பெரும்பாலானவை பூசைப் பொருட்களாக இருந்தது. இது சுற்றுச் சூழலுக்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் பாதிப்பினை உண்டாக்கும். மேலும், குளத்திற்கு வரும் பறவைகளையும் இது பாதிக்கும்." என்றார்.
தன்னார்வலர்கள் அகற்றிய குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.