கோவையில் காவடி போட்டியில் அசத்திய பள்ளி மாணவர்கள்

கோவை: பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள் கோவை அருகே நடைபெற்றது.

கோவை: பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள் கோவை அருகே நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் சங்கமம் கலைக் குழு சார்பில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், காவடியை தலையில் வைத்து ஆடுதல், மயிலாட்டம், கண்ணில் பணம் எடுத்தல், குளிர்பானம் அருந்துதல் போன்ற 10-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

12 குழுக்களைச் சேர்ந்த சார்ந்த 400 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். மூன்று வயது சிறுவர் முதல் 60 வயதுள்ளவர்கள் வரை இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

சிறுவர்கள் தோலில் காவடியை சுமந்துகொண்டு சர்வ சாதாரணமாக ஆடியதும், ஏணியின் மீது ஏறி காவடி ஆடியதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பைகள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இது குறித்து சங்கமம் கலைக்குழு ஆசிரியர் கனகராஜ் கூறுகையில், "அழிந்து வரும் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க கருமத்தம்பட்டி பகுதியில் காவடி ஆட்டத்தை அனைத்துத் தரப்பு மக்களிடையே கொண்டு செல்லும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஒயிலாட்டம், கும்மி ஆட்டம் ஆகியவை இந்தப் பகுதியில் பிரபலமாகி வருகிறது. ஏராளமானோர் இதைக் கற்று கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கலைகளை கற்றுக் கொள்வதில் சிறுவர்கள் முதல் 60 வயதுள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், பாரம்பரிய கலைகளை மீண்டும் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...