கோவை: கோவையில் நடைபெற்று வரும் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டியில், 100 மீ ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் வீரர் இந்திய அளவில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு தடகள சங்கம், கோவை தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழமங்கள் சார்பில் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. 16 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஆந்திரா, பீகார், கர்நாடகா, ஒடிசா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த 840 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 100 முதல் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என 46 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில், நேற்று மழை பெய்ததன் காரணமாக தொடக்க நாளில் நடைபெறவிருந்த 100 மீ ஓட்டப் பந்தயம் இன்று நடைபெற்றது. இதில், பஞ்சாபைச் சேர்ந்த குரீந்தர்வீர் சிங் 10.47 வினாடிகளில் இலக்கைக் கடந்து தேசிய அளவிலான சாதனையைப் படைத்துள்ளார். மேலும், ஆசிய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்ட நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான 100 மீ ஓட்டப் பந்தயத்தில் ஆசியன் யூத் பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.