புத்தாண்டு கொண்டாட்டத்தை வரவேற்கும் விதமாகக் கொண்டாடிய ரேடியோ சிட்டி கோவைக்கு 'கோல்டன் மைக்' விருது வழங்கப்பட்டது.

2018-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கோவை மாநகர காவல்துறையுடன் இணைந்து 'விபத்தில்லா கோவை' என்ற நிகழ்ச்சியை ரேடியோ சிட்டி கோவை நடத்தியது. கோவையில் மட்டும் மொத்தம் 22 இடங்களில் நடத்தியது. சமூக நலனுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மும்பையில் உள்ள ஹார்டு ராக் கஃபேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரேடியோ சிட்டி கோவைக்கு 'கோல்டன் மைக்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ரேடியோ சிட்டி கோவையின் நிரலாக்க இயக்குநர் பிரபு பெற்றுக் கொண்டார். தென்னிந்த அளவில் இந்த விருதைப் பெறும் முதல் ரேடியோ நிலையம், கோவை ரேடியோ சிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.