திருப்பூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற இரு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

திருப்பூர்: திருப்பூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 



திருப்பூர் - பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மகாஷ், மாதேஷ். இருவரும் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் வீரபாண்டி பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நீரில் இறங்கிய அவர்கள், கிணற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். இதனால், நீச்சல் தெரியாத அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். இவர்களது சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் வீரபாண்டி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், சுமார் 2 மணி நேரத் தேடுதலுக்கு பிறகு இரு மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். மாணவர்களின் உடல்களைப் பார்த்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறியழுதனர். தொடர்ந்து, இரு மாணவர்களின் உடல்களும் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...