கோவை : வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததைக் கண்டித்து, கோவையில் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அண்மையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைக் கண்டித்து பலகட்ட போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கோவையில் 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததைக் கண்டித்து ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ் புலிகள் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வந்தடைந்த பயணிகள் ரயிலில் வந்த தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தின். அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், அரசியல் அமைப்பு சட்டத்தின் 9-ல் திருத்தம் செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர். மேலும், ரயில் எஞ்சின் மீது ஏறி அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.