கோவை : கோவை குறிச்சி நகர் ஹவுசிங் யூனிட் பகுதியில் நாய், பறவை, ஆடு, கோழி போன்று சாலையில் சுற்றும் பிராணிகளுக்கு கோடை வெயிலின் தாகம் தீர்க்க சிறுவர்கள் சிறு சிறு தண்ணீர் தொட்டிகளை அமைத்துள்ளனர்.

கோடை காலம் ஆரம்பித்து சில நாட்களிலே ஆன நிலையில், வெயிலின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனிடையே, கோவையில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் சாலையில் சுற்றும் பிராணிகள் தாகம் தீர்க்க தண்ணீருக்காக சுற்றுவதைப் பார்த்த சிறுவர்கள், தங்களின் முயற்சியால் 1 முதல் 2 அடி வரை குழி பறித்து அதன் மீது பிளாஸ்டிக் பையை விரித்து தண்ணீர் உற்றி வைத்தனர்.

இந்நிலையில், தண்ணீர் தேடி அலைந்த பிராணிகள், அதில் தண்ணீர் குடித்து விட்டு செல்கின்றன. இதனால், அப்பகுதி சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிறுவர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.