கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பு நடத்தும் மாரத்தான்

கோவை : உலக ஆரோக்கிய தினம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஆகியவற்றை முன்னிட்டு கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் வரும் 29-ம் தேதி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன.

கோவை : உலக ஆரோக்கிய தினம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஆகியவற்றை முன்னிட்டு கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் வரும் 29-ம் தேதி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன. 



இது தொடர்பாக கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் ஆர்.டி. வினோத் ராஜ்குமார் கூறுகையில், "உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதில், சிறப்பான விஷயம் என்னவெனில், குழந்தைகளை தாக்கும் புற்றுநோயின் 70 சதவீத நோய் தாக்கத்தை குணப்படுத்த முடியும். இந்த நிலையில், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டும் வரும் 29-ம் தேதி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார்.



(5 கி.மீ மற்றும் 10 கி.மீ.) மரத்தான், (3 கி.மீ) வாக்கத்தான் போட்டிகளில், தங்களது உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் என சுமார் 1,200 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பங்கேற்க வருபவர்களுக்கு ரூ. 600-ம், கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு ரூ. 500-ம், மாணவர்களுக்கு ரூ. 300-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...