எரிவாயு நுகர்வோருக்கு அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் விபத்து காப்பீடு

திருப்பூர் : எரிவாயு நுகர்வோர் அனைவருக்கும் விபத்து காப்பீடு உள்ளதாகவும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் விபத்து காப்பீடாக இருப்பதாக திருப்பூரில் இந்துஸ்தான் பெட்ரோலிய வர்த்தக இயக்குநர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் : எரிவாயு நுகர்வோர் அனைவருக்கும் விபத்து காப்பீடு உள்ளதாகவும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் விபத்து காப்பீடாக இருப்பதாக திருப்பூரில் இந்துஸ்தான் பெட்ரோலிய வர்த்தக இயக்குநர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.



சுல்தான் பேட்டையில் பிரதம மந்திரி சமையல் எரிவாயு பஞ்சாயத்து திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், பாதுகாப்பான முறையில் எரிவாயுவைப் பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. புதிய இணைப்புகளுக்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன. 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் வர்த்தக இயக்குநர் ஜெயகிருஷ்ணன் பேசுகையில், "எரிவாயு இணைப்பு பெற்ற அனைவருக்கும் விபத்து காப்பீடு வசதி உள்ளது. தனிநபர் விபத்து காப்பீடு ரூ. 6 லட்சம். ஒரு விபத்துக்கான அதிகபட்ச காப்பீட்டு தொகை, மருத்துவ செலவுடன் ரூ. 30 லட்சமாகும். தனிநபர் உயிரிழப்பு காப்பீடு ரூ. 2 லட்சம். இந்தியா முழுவதும் 22.5 கோடி இணைப்புகள் உள்ளன. இதுவரையில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் ஆயிரம் பேருக்கு காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது," என்றார். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...