16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டி இன்று தொடக்கம் : வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா

கோவை : கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று தொடங்கிய 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டியின், ஒரு பகுதியாக, மாநகர காவல் ஆணையர் பெரியய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கோவை : கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று தொடங்கிய 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டியின், ஒரு பகுதியாக, மாநகர காவல் ஆணையர் பெரியய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 



தமிழ்நாடு தடகள சங்கம், கோவை தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழுமங்கள் சார்பில் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் இன்று காலை துவங்கியது. 16 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஆந்திரா, பீகார், கர்நாடகா, ஒடிசா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த 840 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 100 முதல் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என 46 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.



இன்று காலை நடைபெற்ற ஜூனியர் பெண்களுக்கான பத்தாயிரம் மீட்டர் நடை போட்டியில் உத்தராகண்ட் மாநில வீராங்கனை ரோஜி பட்டேல் முதலிடத்தைப் பிடித்தார். ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹரியானா வீரர் குர்பிரீத் முதலிடத்தையும், தமிழக வீரர் சஞ்சய்குமார் இரண்டாம் இடத்தையும், உத்தரபிரதேச வீரர் அஜய்குமார் பிந்த் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மகாராஷ்ட்ரா வீராங்கனை பூனம் சொனுனே முதல் இடத்தையும், குண்டு எறிதலில் உத்தரபிரதேச வீராங்கனை கிரண் பலியான் முதலிடத்தையும் பிடித்து அசத்தினர். 



மாலையில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா கொடி ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணா கல்வி குழுமங்களின் முதன்மை அதிகாரி சுந்தரராமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இன்று மதியம் பெய்த மழையின் காரணமாக போட்டிகள் சிறிது நேரம் தடைபட்டது. மேலும், மைதானத்தில் தேங்கிய தண்ணீரை ஊழியர்கள் அகற்றினர். இருப்பினும், தண்ணீர் முழுமையாக அகற்றப்படாததால், முழுத் திறனை வெளிப்படுத்துவதில் சிரமமாக இருந்ததாக வீரர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...