திருப்பூரில் உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பிரசித்திபெற்ற மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பிரசித்திபெற்ற மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், உலக நன்மை வேண்டி வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. 



பல்லடம் அருகே மாதப்பூரில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில், உலக நலன் வேண்டியும், மும்மாரி மழை பெய்ய வேண்டியும் வேம்பு - அரச மரங்களுக்கு திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. திருமணத்தை கோவில் பூசாரி சரவணமுத்து வெகுவிமரிசையாக நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு அபிசேகம், ஆராதனை மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாதப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 



இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "மூத்தோர்களது வாக்குப்படி காலங்காலமாக அரச- வேப்ப மரங்களுக்கு திருமணம் செய்து வைத்தால், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, கல்வியில் தேர்ச்சி உள்ளிட்ட பல நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். அதனைப் பின்பற்றி இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது," எனக் கூறினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...