கழிவு பஞ்சிற்கு விதிக்கப்படும் செஸ் வரியைக் குறைக்க வலியுறுத்தல்

கோவை : கழிவு பஞ்சிற்கு விதிக்கப்பட்டுள்ள 1% செஸ் வரியைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை மாவட்ட வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

கோவை : கழிவு பஞ்சிற்கு விதிக்கப்பட்டுள்ள 1% செஸ் வரியைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை மாவட்ட வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். 

கோவை மாவட்ட கழிவு பஞ்சு வியாபாரிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, அதன் ஒருங்கிணைப்பாளர் காட்டன் செந்தில் கூறுகையில், "ஆலைகளில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சிற்கு ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் இந்த வரி வசூலிக்கப்படுவதில்லை. மேலும், மத்திய அரசின் வரி விதிப்புத் துறை, கழிவு பஞ்சு விவசாயப் பொருள் அல்ல என அறிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் இந்த செஸ் வரி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. செஸ் வரி முற்றிலுமாக மார்கெட் கமிட்டியில் இருந்து அகற்றப்பட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்," என்றார். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...