ஊடக பெண்கள் குறித்து சர்ச்சை பதிவு : எஸ்.வி. சேகரை கைது செய்யக் கோரி புகார்

கோவை : ஊடக பெண்கள் குறித்து வக்கிரகமான முறையில் சமூக வலைதளத்தில் பதிவுசெய்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.


கோவை : ஊடக பெண்கள் குறித்து வக்கிரகமான முறையில் சமூக வலைதளத்தில் பதிவுசெய்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.



அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியின் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி, தன்னிடம் பயிலும் மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான தொலைப்பேசி உரையாடல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும் தொடர்பிருக்கலாம் என பல்வேறு அரசியல் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, முதல்முறையாக ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, ஒரு பெண் நிரூபர் ஒருவரின் கண்ணத்தை தொட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அந்த பெண் நிரூபரும் டுவிட்டரில் ஆளுநருக்கு எதிராக கருத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், பா.ஜ.க.வின் ஆதரவாளரும், நடிகருமான எஸ்.வி. சேகர், பெண் நிரூபரை வறுத்தெடுத்திருந்தார். மேலும், பெண் நிரூபர்களும் ஊடகத்துறையில் பாலியல் வன்கொடுமை சந்திப்பதாகவும் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. 



இந்த நிலையில், ஊடக பெண்கள் குறித்து வக்கிரகமான முறையில் சமூக வலைதளத்தில் பதிவுசெய்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பெண் பத்திரிகையாளரை அவதூறாக அவர்களின் கண்ணியத்தை களங்கபடுத்தும் விதமாக சமூகவலைத்தளங்களில் ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுப்படுத்தியுள்ளார். இது ஒட்டுமொத்த மக்களையும், பெண்களையும் கலங்கப்படுத்தும் விதமாக உள்ளது. ஆகவே, எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாதர் சங்கத்தினர் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எஸ்.வி. சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா கூறியதாவது :- ஊடக பெண்களை தரக்குறைவாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட எஸ்.வி சேகரை, உடனடியாக கைது செய்ய வேண்டும். தொடர்ந்து, பெண்களுக்கு எதிராக பா.ஜ.க.,வினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் நிலையில், எஸ்.வி. சேகர் மிக தாழ்ந்த முறையில் பெண் பத்திரிகையாளர்களை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது. ஆகவே, இவர் மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...