சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்சினைகள் நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் குரல்கள் வலுத்துள்ளன.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்சினைகள் பற்றி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் கடிதம் ஒன்று சமர்பிக்கப்பட்டது. அதில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு தூக்கு தண்டனைக் கிடைக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.