கோவை: பெண்களை இழிவுபடுத்தும் விதமான கருத்துக்கள் தெரிவிப்பதை பா.ஜ.க., நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அறிவுறுத்தியுள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்த போது, பா.ஜ.க.,வைச் சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக முகநூலில் பதிவிட்டு இருந்தது குறித்த கேள்விக்கு, கருத்து கூற மறுப்பு தெரிவித்தார்.
மேலும், பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் தி.மு.க., எம்.பி., கனிமொழி குறித்து பதிவிட்டது தொடர்பான கேள்விக்கு, "நான் டுவிட்டர் எதுவும் பார்ப்பதில்லை. பா.ஜ.க., நிர்வாகிகள் பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளை சொல்வதை தவிர்க்க வேண்டும். ஆண்களும், பெண்களும் சமம்," என தம்பிதுரை கருத்து தெரிவித்தார்.